Monday, August 3, 2015

வீட்டில் செய்யக்கூடிய ரெட் ஒயின் ஃபேஷியல்கள்


* இனிப்பான ரெட் ஒயின் 3 டேபிள் ஸ்பூன், 1/2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து

கொள்ளவும். பின் அதில் 2 துளிகள் லாவண்டர் எண்ணெயை ஊற்றி, கலந்து முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து,

வெதுவெதுப்பான நீரால் கழுவிட வேண்டும். இந்த ஃபேஷியலை வறண்ட சருமம் உள்ளவர்கள் செய்தால் நன்றாக இருக்கும்.

* 3 டேபிள் ஸ்பூன் ரெட் ஒயினுடன், தயிர் மற்றும் 2 துளிகள் லாவண்டர் எண்ணெயை விட்டு நன்கு கலந்து, முகத்திற்கு தடவி, 20-25

நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் முகப்பரு, பிம்பிள் போன்றவை நீங்கி, அதிகப்படியான

எண்ணெய் பசையும் நீங்கும். இந்த ஃபேஷியல் எண்ணெய் பசை சருமத்திற்கு ஏற்றது.

* ரெட் ஒயினுடன், கற்றாழை ஜெல்லை கலந்து, முகத்திற்கு தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ

வேண்டும். ஏனெனில் ஒயினை கற்றாழை ஜெல்லுடன் கலந்து பூசும் போது, அந்த கலவை சருமத்தில் ஊடுருவிச் சென்று பொலிவைத்

தருகிறது. மேலும் இந்த ஃபேசியலை செய்வதால் சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் எளிதில் வெளிவந்துவிடும், சருமமும்

குளிர்ச்சியுடன் இருக்கும்.

No comments:

Post a Comment