Monday, August 3, 2015

கூந்தல் பிரச்சனைகளை போக்கும் ஹேர் ஸ்பா


பொடுகு, முடி உதிர்தல், பொலிவிழந்த முடி போன்ற முடி பிரச்சனைகளை ஹேர் ஸ்பா சிகிச்சை மூலம் குறைக்க முடியும். ஹேர் ஸ்பா சீரமைப்பு மயிர் கால்களை வலுவடையச் செய்து முடியை வளரச் செய்கிறது. இது முடியின் வேர்களுக்கு ஊட்டமளிப்பதன் மூலம் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. 

இது உச்சந்தலையில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்துகிறது. பொலிவிழந்த மற்றும் சேதமடைந்த முடிக்கு ஸ்பா சிகிச்சை அற்புதமான முடிவு கொடுக்கிறது. ஹேர் ஸ்பா சிகிச்சை எடுத்துக் கொள்வதால் மூலம், ரிலாக்ஸ் அடைவதுடன் மன அழுத்தம் குறைந்து முடி வளர்ச்சி ஏற்படும். ஹேர் ஸ்பா சிகிச்சை மயிர் கால்களை வலுவடையச் செய்வதால், முடியை அடர்த்தியாக வளரச் செயும். 

உச்சந்தலை வயதாவதால் முடி இழப்பு ஏற்படும். ஆனால் ஹேர் ஸ்பா சிகிச்சையானது, இதனை தடுத்து உச்சந்தலையில் சரும சுரப்பை தோன்ற செய்து முடி உதிர்வை கட்டுப்படுத்துகிறது. உச்சந்தலையில் மசாஜ் செய்து ரத்த ஓட்டத்தை சீர்படுத்துவதால், இது ஒரு சிறந்த முறையாகும். ஹேர் ஸ்பா சிகிச்சை மசாஜ் செய்வதை உள்ளடக்கி இருப்பதால், இதன் மூலம் உச்சந்தலையில் எண்ணெய் ஆழமாக ஊடுருவி செல்லும். இந்த எண்ணெய் முடிக்கு ஊட்டமளித்து முடியை பொலிவிழந்த நிலையிலிருந்து தடுக்கும். 

முடியை நன்றாக மற்றும் ஆரோக்கியமாக பராமரிக்க, உச்சந்தலையில் எண்ணெய் சுரப்பு சீராக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். எண்ணெய் குறைவாக சுரந்தால், பொலிவிழந்த மற்றும் உலர்ந்த முடி ஏற்படுகிறது. எண்ணெய் சுரப்பு அதிகம் இருந்தால், முடி ஓட்டும் தன்மை பெறுகின்றது. ஆகவே முடியை ஆரோக்கியமாக பராமரிக்க உச்சந்தலையில் எண்ணெய் சுரப்பு சீரானதாக இருக்க வேண்டும். அதற்கு ஹேர் ஸ்பா உதவும்.

No comments:

Post a Comment